போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
பொதுவாக விஜய் நடிக்கும் படங்கள் அனைத்துமே படம் ஆரம்பிக்கப்பட்டு முக்கால்வாசி படப்பிடிப்பு முடிந்த நிலையில்தான் அவற்றின் டைட்டிலே அறிவிக்கப்படும்.. அதுவரை ரசிகர்களும் மீடியாக்களும் தாங்களாகவே ஒரு ஆளுக்கொரு பெயரை சூட்டி அழகுபார்க்கும் வேலையை செய்துகொண்டிருப்பார்கள்.. அந்தவகையில் தற்போது பரதன் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் அவரது 60வது படத்திற்கு எங்க வீட்டுப்பிள்ளை என்கிற டைட்டில் வைக்கப்பட இருப்பதாக 90 சதவீதம் உறுதியாக சொல்லப்பட்டு வந்தது.. மீடியாவிலும் அந்தப்பெயர் தான் புழக்கத்தில் இருந்து வருகிறது.. ஆனால் விஜயோ, தயாரிப்பு நிறுவனமோ அதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
இந்தநிலையில் தான் இந்தப்படத்திற்கு பைரவா என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.. படம் 2017ல் வெளியாக இருக்கிறதாம். விநாயகர் சதுர்த்தி பண்டிகை தினமான நாளை (செப்-5)ஆம் தேதி தனது படத்தின் டைட்டிலை அறிவிக்க விஜய் முடிவுசெய்திருந்தார். ஆனால் இந்த டைட்டிலும் பர்ஸ்ட் லுக்கும் எப்படியோ அதற்கு முதல்நாளான இன்றே ஆன்லைனில் லீக்காகியுள்ளது படக்குழுவினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இதேபோலத்தான் விஜய் நடித்த புலி படத்தின் டீசரும் சொன்ன தேதிக்கு முன்பாகவே ஆன்லைனில் லீக்கானது குறிப்பிடத்தகது.